Posts

Showing posts with the label குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும்

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும்

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும் தலைவியின் நிலையைக் கண்டு மனம் கலங்கிய செவிலித் தாய் அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்                      5 வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி ( 1-8) அருஞ்சொற்பொருள் : 1. அன்னாய் = தாயே ; வாழி = நீ வாழ்வாயாக ; வேண்டு = நான் கூறுவதை விரும்பிக் கேள் ; ஒண்ணுதல் = ஒள் + நுதல் = ஒளி பொருந்திய நெற்றி . 2. ஒலித்தல் = தழைத்தல் ; மென் = மென்மையான . 3. விறல் = பெருமை ; இழை = ஆடை அணிகலன்கள் ; நெகிழ்த்த = நழுவச் செய்த ; வீவு = அழிவு ; கடுமை = கொடுமை .   4. அகலுள் = அகல் + உள் = அகன்ற உள்ளிடம் ; ஆங்கண் = ஊர் ; அறியுநர் = பிறர் அறியாதவற்றைஅறிந்தவர்கள் ; வினாயும் = கேட்டும் . 5.   பரவியும் = வாழ்த்தியும் ; விரவுதல் = கலத்தல் ;...