Posts

Showing posts from August, 2018

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாட்டும் புலவரும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்   பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன .   பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று . அது   261 அடிகளைக்கொண்ட பாடல்.   இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது .   குறிஞ்சிப்பாட்டு கி . பி . இரண்டாம் நூற்றண்டில் இயற்றப்பட்டாதாக மா . இராசமாணிக்கனார் கூறுகிறார் . ( சங்க இலக்கிய வரலாறு , மா . ரா . களஞ்சியம் , காவ்யா பதிப்பகம் , பக்கம் 210) கபிலர் வரலாறு குறிஞ்சிப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் கபிலர் . கபிலர் திருவாதவூரில் பிறந்தவர் . திருவாதவூர் மதுரைக்கு 25 கி . மீ வடக்காகவும் மேலூருக்கு 8 கி ,. மீ மேற்காகவும் உள்ளது . திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் திருவாதவூரில்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது . கபிலர் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.   அவர் ‘ புலன் அழுக்கற்ற அந்தணாளன் ’ என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126).   க

குறிஞ்சிப்பாட்டு - மூலம்

குறிஞ்சிப்பாட்டு - மூலம் அன்னாய் வாழிவேண் டன்னை யண்ணுத லொலிமென் கூந்தலென் றோழி மேனி விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ யகலு ளாங்க ணறியுநர் வினாயும்   பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் லுருவிற் கடவுட் பேணி நறையும் விரயு மோச்சியு மலவுற் றெய்யா மையலை நீயும் வருந்துதி நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும் புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு ....                 10 முட்கரந் துறையு முய்யா வரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்   முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்ப நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி ...                          20 யிருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ வாற்றின் வாரா ராயினு மாற்ற வேனையுல கத்து மியைவதா னமக்கென மானமர் நோக்கங் கலக்கிக் கையற் றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போ

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும்

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும் தலைவியின் நிலையைக் கண்டு மனம் கலங்கிய செவிலித் தாய் அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்                      5 வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி ( 1-8) அருஞ்சொற்பொருள் : 1. அன்னாய் = தாயே ; வாழி = நீ வாழ்வாயாக ; வேண்டு = நான் கூறுவதை விரும்பிக் கேள் ; ஒண்ணுதல் = ஒள் + நுதல் = ஒளி பொருந்திய நெற்றி . 2. ஒலித்தல் = தழைத்தல் ; மென் = மென்மையான . 3. விறல் = பெருமை ; இழை = ஆடை அணிகலன்கள் ; நெகிழ்த்த = நழுவச் செய்த ; வீவு = அழிவு ; கடுமை = கொடுமை .   4. அகலுள் = அகல் + உள் = அகன்ற உள்ளிடம் ; ஆங்கண் = ஊர் ; அறியுநர் = பிறர் அறியாதவற்றைஅறிந்தவர்கள் ; வினாயும் = கேட்டும் . 5.   பரவியும் = வாழ்த்தியும் ; விரவுதல் = கலத்தல் ; தூயும் = தூவியும் . 6. பேணி = போற்றி .   7. நறை = நல்ல மணமுள்ள புகை ; விரை = வாசனைப் பொருள் ; ஓச்சியும்