குறிஞ்சிப்பாட்டு – பொருட்சுருக்கம்
குறிஞ்சிப்பாட்டு – பொருட்சுருக்கம் தலைவியின் நிலையைக் கண்டு மனம் கலங்கிய செவிலித் தாய் தாயே! நீ வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேள். ஓளிபொருந்திய நெற்றியையும் , தழைத்த மெல்லிய தலைமுடியையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்துள்ள பெருமைக்குரிய ஆடை அணிகலன்களை நழுவச் செய்த , மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயின் காரணத்தை அறிந்துகொள்வதற்காக , இந்த அகன்ற ஊரில் அதுபற்றித் தெரிந்தவர்களிடம் நீ கேட்டாய். பலவேறு உருவங்களில் உள்ள தெய்வங்களை வாயால் வாழ்த்தியும் , உடலால் வணங்கியும் , பல நிறங்களில் உள்ள மலர்களைத் தூவியும் தொழுதாய் ; நறுமணமுள்ள புகையைச் செலுத்தியும் வணங்கினாய். ஆனால் , என் தோழி இன்னும் நோயால் வருந்துகிறாள். தலைவியின் நோயின் காரணத்தை அறியாமல் நீயும் தீராத மனக் கலக்கமுற்று வருந்துகிறாய். தலைவியின் நிலையை அறிந்துகொண்ட தோழி அவளுடைய நல்ல அழகு கெடவும் , நறுமணமிக்க தோள்கள் மெலியவும் , வளையல்கள் கழலுவதைப் பிறர் அறியவும் , அ வள் உள்ளத்தில் தனிமைத் துயர் தோன்றி வருத்தவும் காரணமாக அவள் உள்ளத்தில் மறைந்திருக்கும் துன்பத்தைப் பற்றி அவளே கூறும்படி என்னுடைய சொ...